- Advertisement -
80-களில் கங்கை அமரன் இயக்கிய எங்க ஊரு பாட்டுக்காரன் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்றது. இதில் ராமராஜன் நாயகனாக நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக சாந்தி பிரியா என்பவர் நடித்திருப்பார். இவர் நடிகை பானுப்பிரியாவின் சகோதரி ஆவார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு தமிழ் மட்டுமன்றி தெலுங்கு, இந்தி என அனைத்து திரை உலகிலும் ஒரு வலம் வந்தார். ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகிய அவர் பல ஆண்டுகள் கழித்து, டாக்டர் சரோஜினி நாயுடுவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து வருகிறார்.

அதே சமயம் தாராவி பேங்க் என்ற வெப் தொடரிலும் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தில் நாயகியாக நடிக்கிறார் சாந்தி. வர்ஷா பரத் என்பவர் இத்திரைப்படத்தை இயக்குகிறார். 25 வயதிலிருந்து 55 வயது வரையிலான ஒரு பெண்ணின் வாழ்வை மையப்படுத்தி இப்படம் உருவாகிறது. இப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் ட்ரைலர் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது.




