பிரபல நடிகை ரம்யா கிருஷ்ணன் நீண்ட இடைவெளிக்கு பிறகு சின்னத்திரையில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.
ரம்யா கிருஷ்ணன், 90 காலகட்டத்தில் பலரின் கனவு கன்னியாக வலம் வந்தவர்களில் ஒருவர். அதிலும் படையப்பா திரைப்படத்தில் இவரின் நீலாம்பரி கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது. இவ்வாறு ரஜினி, கமல் என பல ஸ்டார் நடிகர்களுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ளார்.

சமீபத்தில் கூட ரஜினியின் ஜெயிலர் திரைப்படத்தில் ரஜினிக்கும் மனைவியாக நடித்திருந்தார். இதற்கிடையில் சன் டிவியில் ஒளிபரப்பான கலசம், தங்கம், வம்சம் உள்ளிட்ட சீரியல்களில் கதாநாயகியாக நடித்திருந்தார். அதைதொடர்ந்து பிக் பாஸ் ஜோடிகள் போன்ற நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ள நளதமயந்தி எனும் சீரியலில் நடிக்கிறார். இந்த சீரியல் வருகின்ற அக்டோபர் 9ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.