மகளின் பெயரை பச்சை குத்திய பிரபல பாலிவுட் நடிகர்
- Advertisement -
பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் தனது மகள் ராகாவின் பெயரை நிரந்தரமாக தன் உடலில் பச்சை குத்தியிருக்கிறார்.
பாலிவுட்டில் டாப் நடிகர் நடிகையாக வலம் வருபவர்கள் ரன்பீர் கபூர் மற்றும் அலியா பட். இவர்கள் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வந்த நிலையில், கடந்த 2022-ம் ஆண்டு நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து, இந்த நட்சத்திர தம்பதிக்கு ராகா என்ற பெண் குழந்தை பிறந்தது. இன்று பாலிவுட்டில் முன்னணி நட்சத்திர தம்பதிகளாக வலம் வருகின்றனர். திருமணத்திற்கு பின்பும் இருவரும் பிசியாக நடித்து வருகின்றனர்.
பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வந்த அலியா பட் ஆர்.ஆர்.ஆர். படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகிற்கும் அறிமுகமானார். இதைத் தொடர்ந்து, ஹாலிவுட்டிலும் படங்களில் நடித்து வருகிறார். ரன்பீர் கபூர் நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் அனிமல். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய இத்திரைப்படம், பெரிதளவில் வரவேற்பை பெற்றது. அத்துடன் வசூலையும் வாரிக் குவித்தது. இதைத் தொடர்ந்து அனிமல் இரண்டாம் பாகத்திற்கான பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நடிகர் ரன்பீர் கபூர் தனது மகள் ராகாவின் பெயரை தோள் பட்டையில் பச்சைக் குத்தியிருக்கிறார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.