Homeசெய்திகள்சினிமா10000 குழந்தைகளை இலவசமாக படத்திற்கு அழைத்து செல்லும் ரன்பீர் கபூர்... என்ன படம் தெரியுமா?

10000 குழந்தைகளை இலவசமாக படத்திற்கு அழைத்து செல்லும் ரன்பீர் கபூர்… என்ன படம் தெரியுமா?

-

பிரபல நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு அதிக வரவேற்பு பெரும் பான் இந்தியா நடிகராக உருவெடுத்துள்ளார்.

தற்போது இவர் நடிப்பில் ஆதிபுருஷ் என்ற சரித்திர படம் உருவாகியுள்ளது.
இப்படத்தில் பிரபாஸ் உடன் இணைந்து பாலிவுட் நடிகை கீர்த்தி சனோன், சைஃப் அலிக்கான், சன்னி சிங், தேவதத்தா நாகே உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தை இயக்குனர் ஓம் ராவத் இயக்கியுள்ளார். இப்படத்தை டி சீரிஸ் மற்றும் ரெட்ரோபைல்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இந்த படம் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் 2D மற்றும் 3D வடிவங்களில் உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
மேலும் இப்படம் திரைக்கு வரும் முன்பே 170 கோடி ரூபாய்க்கு , ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பிபிள் மீடியா கம்பெனிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்நிறுவனமே இந்த படத்தை வெளியிடும் உரிமையை கைப்பற்றியுள்ளது.

இந்த படம் வருகின்ற ஜூன் 16ஆம் தேதி திரைக்கு வர இருக்கும் நிலையில் ‘கார்த்திகேயா 2’ படத்தின் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால், ஆதிபுருஷ் படத்திற்காக பத்தாயிரத்துக்கும் மேலான டிக்கெட்டுகளை விநியோகிப்பதாக அறிவித்திருந்தார். தற்போது அந்த பத்தாயிரம் டிக்கெட்டுகளை பிரபல பாலிவுட் நடிகரான ரன்பீர் கபூர், இந்தியாவில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளுக்கு வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

புகழ்பெற்ற ஸ்ரீராமரின் கதையில் உள்ள பாடங்களை இன்றைய தலைமுறைக் குழந்தைகள் கற்றுக்கொண்டு அதன் மூலம் பயனடைவார்கள் என்று ரன்பீர் கபூர் நம்புகிறார்.

MUST READ