spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரன்வீர் சிங் - தீபிகா படுகோன் விவாகரத்து?... உண்மை இதுதானா...

ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் விவாகரத்து?… உண்மை இதுதானா…

-

- Advertisement -
பாலிவுட்டில் முக்கிய நட்சத்திர தம்பதிகளாக வலம் வருபவர்கள் தீபிகா படுகோன் மற்றும் ரன்வீர் சிங். இவர்கள் இருவரும் முன்னணி நடிகர், நடிகைகளாக இந்தி திரையுலகில் வலம் வருகின்றனர். இருவரும் இணைந்து பாஜிரா மஸ்தானி, ராம் லீலா, என பல படங்களில் ஜோடிகளாக நடித்திருக்கின்றனர். இவர்கள் ராம் லீலா படத்தில் ஒன்றாக இணைந்து நடிக்கும்போதே, காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் கடந்த 2018-ம் ஆண்டு இத்தாலியில் மிகவும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

திருமணம் முடிந்த பிறகும் இருவரும் பாலிவுட்டில் பிசியாக தனித்தனியாக நடித்து வருகின்றனர். தீபிகா படுகோனும் பல படங்களில் கமிட்டாகி இருக்கிறார். அவரது நடிப்பில் கடந்த ஆண்டு பதான், ஜவான் திரைப்படங்கள் வெளியாகின. இந்த இரண்டு திரைப்படங்களுமே சுமார் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஹிருத்திக் ரோஷனுக்கு ஜோடியாக ஃபைட்டர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனிடையே, நடிகை தீபிகா படுகோன் கர்ப்பாக இருப்பதாக அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், தீபிகா படுகோனும், ரன்வீர் சிங்கும் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருவரின் இன்ஸ்டா பக்கங்களிலும், இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இல்லை, இதனால், உறவில் பிரச்சனை ஏற்பட்டிருப்பதாக நெட்டிசன்கள் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில், இருவரும் நலமுடன் இருப்பதாகவும், இருவரும் மகிழ்ச்சியாக குழந்தையை வரவேற்க காத்திருப்பதாகவும் தீபிகா படுகோன் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், தீபிகா படுகோனும், தாங்கள் சுற்றுலா சென்ற புகைப்படத்தை பதிவிட்டு பதிலடி கொடுத்துள்ளார்.

MUST READ