விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா இருவரும் லிவிங்டுகெதர் உறவு முறையில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.
விஜய் தேவரகொண்டா மற்றும் ரஷ்மிகா மந்தானா இருவரும் இணைந்து ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்திருந்தனர். அந்தப் படம் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றது. அதையடுத்து இருவரும் இணைந்து ‘டியர் காம்ரேட்’ படத்தில் நடித்தனர்.

இதற்கிடையே இருவரின் நட்பு நெருங்கியதாக மாறியது. அந்தப் படங்களை அடுத்து இருவரும் அடிக்கடி ஒன்றாகவே காணப்பட்டனர். பின்னர் இருவரும் காதலித்து வருவதாக பல செய்திகள் அவ்வப்போது வெளியாகி வந்தன.
மாலத்தீவு உள்ளிட்ட சுற்றுலா தளங்களுக்கும் இருவரும் சேர்ந்து அடிக்கடி சென்று வந்தனர். சில புகைப்படங்களில் இருவரும் ஒரே இடத்தில் இருப்பது போல நாம் நிறைய பார்த்திருக்கிறோம். அதுபோல ரஷ்மிகா ஒரு முறை லைவ் வந்த போது அதில் விஜய் தேவரகொண்டாவின் குரல் கேட்டது. இதை வைத்து இருவரும் கண்டிப்பாக காதலித்து வருகிறார்கள் என்று ரசிகர்கள் முடிவு எடுத்தனர்.
தற்போது ரஷ்மிகா சமீபத்தில் ஒரு புகைப்படம் வெளியிட்டுள்ளார். அது எந்த இடம் என்று பார்த்தால் இதற்கு முன் விஜய் தேவரகொண்டா புகைப்படம் வெளியிட்ட அதே இடமாகத் தான் இருக்கிறது.
இந்நிலையில் இருவரும் லிவிங் டுகெதர் உறவு முறையில் இருந்து வருவதாக அழுத்தம் திருத்தமாக தெலுங்கு சினிமா வட்டாரங்கள் கூறி வருகின்றன. மேலும் ஒரு சில வாரங்களுக்கு முன்பு தனது காதலியை அறிமுகப்படுத்த இருப்பதாக விஜய் தேவரகொண்டா அறிவித்தார். இவை அனைத்தும் நம்மை ஒரே இடத்திற்கு தான் கூட்டி வருகிறது.
பொறுத்திருந்து பார்ப்போம் நல்ல செய்தி கிட்டும்!