ரன்பீர் கபூர் நடிப்பில் அனிமல் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை அர்ஜுன் ரெட்டி படத்தை இயக்கிய சந்திப் ரெட்டி வங்கா இயக்கியுள்ளார். சந்திப் ரெட்டி வங்காவின் அர்ஜுன் ரெட்டி திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றதால் அனிமல் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.
பத்ரகாளி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள அனிமல் திரைப்படமானது, மிகப்பிரமாண்டமான ஆக்சன் படமாக உருவாகியுள்ளது. தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வருகின்ற டிசம்பர் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. சமீபத்தில் படத்தின் கிளிம்ஸ் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
அதைத் தொடர்ந்து படத்தின் டீசர் மற்றும் முதல் பாடல் வெளியாகின. இந்த பாடல் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனிடையே பாடலில் முத்தக்காட்சியும் இடம்பெற்றிருந்தது. இது விமர்சனத்திற்கு ஆளானது. முத்தக்காட்சிக்கு கூடுலதாக 10 லட்சம் ரூபாய் ராஷ்மிகா வாங்கியதாக தகவல் வெளியானது. இதை மறுத்துள்ள ராஷ்மிகா, முத்தக்காட்சிகளுக்கு நடிக்க ஒப்புக்கொண்டே நடித்ததாகவும், அதற்காக கூடுதல் சம்பளம் வாங்கவில்லை என்றும் ராஷ்மிகா தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.