பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில்ராஜு தயாரிக்கும் புதிய படத்தில் ராஷ்மிகா கதாநாயகியாக நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
நடிகை ராஷ்மிகா தற்போது பான் இந்தியா நடிகையாக உருவெடுத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் மொழிகளில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

அமிதாப் பச்சனுடன் அவர் நடித்த குட்பை மற்றும் சித்தார்த் மல்ஹோத்ரா உடன் இணைந்து நடித்த மிஷன் மஞ்சு உள்ளிட்ட படங்களில் நடித்தார்.
தற்போது அர்ஜுன் ரெட்டி இயக்கத்தில் ரன்பீர் கபூர் நடித்து வரும் அனிமல் படத்தில் நடித்து வருகிறார் ராஷ்மிகா. இந்த படத்தைத் தொடர்ந்து மீண்டும் ஹிந்தியில் ஒரு பெரிய படத்தில் நடிக்க உள்ளார் என்கிற தகவலும் தற்போது வெளியாகி உள்ளது.
தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு புதிய படத்தை தயாரிக்க. இருக்கிறார். இந்தப் படத்தை ஹிந்தியின் பிரபல தயாரிப்பாளரான ஏக்தா கபூரூம் இந்தப் படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தப் படத்தில் இந்த படத்தில் தான் ராஷ்மிகா கதாநாயதியாக நடிக்க இருக்கிறார் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே ஹிந்தியில் ஏக்தா கபூர் தயாரித்த ‘குட் பை’ மற்றும் தெலுங்கில் தில் ராஜு தயாரித்த ‘வாரிசு’ ஆகிய படங்களில் ரஷ்மிகா தான் கதாநாயகியாக நடித்திருந்தார்.
எனவே ரஷ்மிகா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.