Homeசெய்திகள்சினிமாகர்நாடக பாரம்பரிய உடையில் ராஷ்மிகா... சொந்த ஊரான குடகில் திருமண கொண்டாட்டம்...

கர்நாடக பாரம்பரிய உடையில் ராஷ்மிகா… சொந்த ஊரான குடகில் திருமண கொண்டாட்டம்…

-

- Advertisement -
kadalkanni
கர்நாடகாவில் பிறந்து வளர்ந்து ஒட்டுமொத்த இந்திய திரை உலக்கையும் திரும்பிப் பார்க்க வைத்த நடிகை ராஷ்மிகா மந்தனா. கர்நாடகாவில் மாபெரும் தேயிலை எஸ்டேட் அதிபரின் மகள் தான் ராஷ்மிகா பள்ளி பருவத்திலேயே சினிமாவின் மீது அதிக ஆர்வம் கொண்ட ராஷ்மிகா மந்தனா, கல்லூரி படிப்பு முடிந்தவுடன் மாடல் துறையை தேர்வு செய்தார். முன்னணி நிறுவனத்தின் விளம்பரத்திற்காக ராஷ்மிகாவின் முகம் வெளியே தெரிந்தது. இதைத்தொடர்ந்து கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.
தெலுங்கில் விஜய் தேவரகொண்டா உடன் அவர் நடித்த கீதகோவிந்தம் திரைப்படம் மாபெரும் ஹிட் அடித்தது. பின்னர் தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படத்தில் நடித்தார். இதையடுத்து பாலிவுட்டில் குட்பாய் படத்திலும், ரன்பீர் கபூர் நடித்த அனிமல் திரைப்படத்திலும் நடித்து புகழ் பெற்றார். இன்று தென்னிந்திய சினிமா மட்டுமன்றி இந்தியிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது குபேரா, தி கேர்ள் பிரண்ட், ரெயின்போ, சிக்கந்தர் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா கர்நாடக பாரம்பரிய முறையில் புடவை அணிந்து அவரது தோழியின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். சொந்த ஊரான குடகில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.

MUST READ