- Advertisement -
டீப் பேக் தொழில்நுட்பத்தால் தினந்தினம் பாதிக்கப்படும் பெண்கள் குறித்து அச்சப்படுவதாகவும், இது தொடர்பாக விழிப்புணர்வு வேண்டும் எனவும் நடிகை ராஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
மாடலாக அறிமுகமாகி கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி படத்தின் மூலம் நடிகையாக திரைக்கு வந்தவர் ராஷ்மிகா மந்தனா. கன்னட திரையுலகம் என்ற குறுதிய வட்டத்தில் ஒரு சிறிய நடிகையாக அறிமுகமான ராஷ்மிகாவுக்கு, முதல் படத்திற்கு பிறகு தெலுங்கில் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் அவர் நடித்தார். இத்திரைப்படம் தெலுங்கு மட்டுமன்றி தமிழ், மலையாளம் என அனைத்து மொழி ரசிகர்களிடமும் வரவேற்பை பெறவே அவர் முன்னணி நடிகையாக உயர்ந்தார். அடுத்தடுத்து தெலுங்கில் பல திரைப்படங்களில் நடித்தார் ராஷ்மிகா.
