டெல்லி காவல்துறைக்கு நன்றி தெரிவித்த நடிகை ராஷ்மிகா மந்தனா
- Advertisement -
நடிகை ராஷ்மிகா மந்தனா டெல்லி காவல்துறைக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்திய திரையுலகில் உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கர்நாடகத்தை பூர்வீகமாகக் கொண்ட நடிகை ராஷ்மிகா முதலில் மாடலாக பணிபுரிந்தார். பின்னர் கிரிக் பார்ட்டி என்ற படத்தின் மூலம் அவர் திரைக்கு அறிமுகமாகினார். முதல் திரைப்படமே அவருக்கு நல்ல வரவேற்பை அளித்தது. இதைத்தொடர்ந்து அவருக்கு தெலுங்கில் வாய்ப்புகள் குவியத் தொடங்கின. தெலுங்கில் கீதா கோவிந்தம் படத்தில் அறிமுகமாகினார். இதில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

தொடர்ந்து தெலுங்கில் அடுத்தடுத்து நடிக்கத் தொடங்கினார். பின்னர் தமிழில் கார்த்தி நடித்த சுல்தான் படத்தின் மூலம் அறிமுகமானார். அடுத்து வம்சி இயக்கத்தில் விஜய் நடித்த வாரிசு படத்தில் நடித்தார். இதையடுத்து பாலிவுட்டில் குட்பாய் படத்தில் அமிதாப்பச்சனுடன் இணைந்து நடித்தார் ராஷ்மிகா. இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பாலிவுட்டிலும் அவர் முன்னணி நடியாக மாறி இருக்கிறார். இறுதியாக அவரது நடிப்பில் அனிமல் என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது.

இந்நிலையில், அண்மையில் ராஷ்மிகா மந்தனாவை ஆபசமாக சித்தரித்து டீப் பேக் வீடியோ வெளியிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திது. பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து குரல் எழுப்பினர். இதையடுத்து, டெல்லி போலீசார் இது தொடர்பாக விசாரித்து வீடியோ வெளியிட்ட நபரை கைது செய்தனர். இதைத்தொடர்ந்து, நடிகை ராஷ்மிகா மந்தனா டெல்லி காவல்துறைக்கு நன்றி தெரிவித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.