Homeசெய்திகள்சினிமாஏ.ஆர். முருகதாஸ் படத்தில் இணைந்த ராஷ்மிகா!

ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் இணைந்த ராஷ்மிகா!

-

- Advertisement -

இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் தீனா, ரமணா, கத்தி, துப்பாக்கி, கஜினி போன்ற பல வெற்றி படங்களை இயக்கியதன் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் இணைந்த ராஷ்மிகா!அதேசமயம் இவருடைய படங்கள் பெரும்பாலும் கமர்சியல் படமாக இந்திய அளவில் பேசப்படுகிறது. அடுத்ததாக இவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதைத்தொடர்ந்து யாரும் எதிர்பாராத விதமாக பாலிவுட் பக்கம் திரும்பி சல்மான் கானை இயக்க முடிவு செய்தார்.ஏ ஆர் முருகதாஸ் ஏற்கனவே ஆமிர் கான் நடிப்பில் கஜினி திரைப்படத்தை இயக்கியிருந்தார். ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் இணைந்த ராஷ்மிகா!அதன் பிறகு நீண்ட இடைவெளிக்கு பிறகு பாலிவுட்டில் களமிறங்கி இருக்கிறார். சல்மான் கான், ஏ ஆர் முருகதாஸ் கூட்டணியில் உருவாக உள்ள புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகி எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அதே சமயம் இந்த படத்திற்கு சிக்கந்தர் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதாகவும் இந்த படம் 2025 ரமலான் தினத்தை முன்னிட்டு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் தொடர்பான புதிய அப்டேட் கிடைத்துள்ளது.ஏ.ஆர். முருகதாஸ் படத்தில் இணைந்த ராஷ்மிகா! அதாவது நடிகை ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் இணைந்துள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகை ராஷ்மிகா மந்தனா அனிமல் திரைப்படத்திற்கு பிறகு தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ