பிரபாஸூக்கு ஜோடியாகும் ராஷ்மிகா… ஸ்பிரிட் படத்தின் புதிய அப்டேட் இதோ…
- Advertisement -
டோலிவுட், கோலிவுட், மோலிவுட், பாலிவுட் என அனைத்திந்திய மொழிகளிலும் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபாஸ். பாகுபலி படத்தின் வெற்றிக்கு பிறகு உச்ச நடிகராக உருவெடுத்தார் நடிகர் பிரபாஸ். அவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் சலார். பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் பிருத்விராஜ், பிரபாஸ், ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சலார் PART 1 CEASE FIRE என்ற பெயரில், கடந்த ஆண்டு இறுதியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதைத் தொடர்ந்து கல்கி திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார். நாக் அஸ்வின் இயக்கத்தில் கமல்ஹாசன், தீபிகா படுகோன், அமிதாப் பச்சன் ஆகியோர் நடித்துள்ள இத்திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து, அர்ஜூன் ரெட்டி, அனிமல் திரைப்படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க இருக்கிறார்.

ஸ்பிரிட் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் அறிவிப்பு கடந்த ஆண்டே வெளியானது. ஆனால் அறிவிப்புக்கு பின் பிரபாஸ் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இந்த ஆண்டு இறுதியில் தொடங்க இருக்கிறது. இப்படத்தில் நடிகர் பிரபாஸ் போலீசாக நடிப்பதாக ஏற்கனவே தகவல் வெளியானது. இத்திரைப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இவர் ஏற்கனவே சந்தீப் இயக்கிய அனிமல் படத்தில் நாயகியாக நடித்திருந்தார். இருப்பினும், அதிகாரப்பூர்வ தகவலுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.