spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகடும் போட்டியால் மாற்றப்பட்ட 'ரத்தம்' படத்தின் ரிலீஸ் தேதி!

கடும் போட்டியால் மாற்றப்பட்ட ‘ரத்தம்’ படத்தின் ரிலீஸ் தேதி!

-

- Advertisement -

ரத்தம் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் ரத்தம் திரைப்படம் உருவாகி உள்ளது. கிரைம் திரில்லர் கதை களத்தில் உருவான இந்த படத்தை சி எஸ் அமுதன் இயக்கியுள்ளார். இதில் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட விஜய் ஆண்டனி உடன் இணைந்து நடித்துள்ளனர். இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ள நிலையில் கண்ணன் நாராயணன் இசை அமைத்துள்ளார். அமர்நாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. செப்டம்பர் 28ஆம் தேதி சந்திரமுகி 2 இறைவன் உள்ளிட்ட பெரிய படங்கள் ரிலீஸ் ஆவதால் ரத்தம் ரிலீஸ் தேதி அக்டோபர் 6ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

MUST READ