இராவணக் கோட்டம் படம் சாதியம் சார்ந்த படம் என்று பல கருத்துக்கள் நிலவி வருவதால் அதுகுறித்து படக்குழுவினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மத யானைக்கூட்டம் படத்தின் இயக்குனர் விக்ரமன் சுகுமாரன் இயக்கத்தில் சாந்தனு நடிப்பில் ‘இராவணக் கோட்டம்‘ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ளார். சாந்தனு கிராமத்து கதை களத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார்.

இதற்கிடையில் இராவணக் கோட்டம் படம் சாதியம் சார்ந்த படம் என்று பல கருத்துக்கள் நிலவி வருவதால் தற்போது அதுகுறித்து படக்குழுவினர் தெளிவுபடுத்தியுள்ளனர்.
இதுகுறித்த அறிக்கை பின்வருமாறு:
“மண் சார்ந்த கதையை மனிதத்தை, அன்பை விதைக்கும் படைப்பாக மட்டுமே எங்கள் “இராவண கோட்டம்” திரைப்படத்தை உருவாக்கியுள்ளோம். இயக்குநர் விக்ரம் சுகுமாரன் இயக்கத்தில் ஷாந்தனு நடிப்பில் உருவாகியுள்ள இப்படம்
(முழுக்க முழுக்க கற்பனையில் உருவாக்கப்பட்ட கதையாகும். எந்த வகையிலும் இனம், மொழி, சார்ந்து யாரையும் காயப்படுத்தும் வகையில் எந்த ஒரு காட்சியும் படத்தில் உருவாக்கபடவில்லை.
நேற்று நடந்த பத்திரிக்கையாளர் முன் வெளியீட்டு காட்சி மற்றும் பிரத்யேக காட்சியில் படம் பார்த்த பத்திரிக்கை நண்பர்கள் மற்றும் பொதுமக்கள் நண்பர்கள் இதை உறுதிப்படுத்தியுள்ளனர் மற்றும். மக்களிடையேயான ஒற்றுமையும் அன்பையும் போற்றும் இப்படத்தின் கருவை அனைவரும் பாராட்டியுள்ளனர்.
படத்தில் ஒரு சில இனத்தினரை காயப்படுத்தியுள்ளதாக எழுந்துள்ள வதந்திகள் முற்றிலும் பொய்யானது. இப்படம் எவரையும் எந்த வகையிலும் காயப்படுத்தவில்லை. தயவுகூர்ந்து வதந்திகளை நம்பி படத்தின் மீது
தடை கோருவதும் படத்தை தடுக்கும் நோக்கிலான செயல்பாடுகளிலும். ஈடுபட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறோம்.” என்று தெரிவித்துள்ளனர்.