spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரூ.100 கோடி நஷ்டஈடு கோரி நடிகை ரவீணா நோட்டீஸ்

ரூ.100 கோடி நஷ்டஈடு கோரி நடிகை ரவீணா நோட்டீஸ்

-

- Advertisement -
kadalkanni
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ரவீணா தண்டன். இவர் கன்னடத்தில் யாஷ் நடித்த கேஜிஎஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தின் மூலம் இவர் தென்னிந்திய ரசிகர்கள் மத்தியிலும் பிரபலம் அடைந்தார். கடந்த ஜூன் 2-ம் தேதி, மும்பையில் பார்ட்டி ஒன்றுக்கு சென்றுவிட்டு அதிகாலையில் வீடு திரும்பியிருக்கிறார் நடிகை ரவீணா. மும்பை சாலையில் அவரது கார் சென்று கொண்டிருந்தபோது, சாலையை கடக்க முயற்சி செய்த 3 பெண்கள் மீது கார் மோதியது.
 உடனே காரை விட்டு கீழே இறங்கி வந்த ஓட்டுநர், சாலையை கடக்க முயன்ற பெண்களுடன் தகராறு செய்தார். அதே சமயம், காரிலிருந்து இறங்கி வந்த நடிகை ரவீணாவும், பெண்களை தாக்கியதாக கூறப்படுகிறது. சம்பவத்தை அறிந்த உள்ளூர் மக்கள் உடனடியாக திரண்டு வந்தனர். சம்பவத்தை அறிந்த மக்கள், அங்கு பிரச்சனை செய்த நடிகை ரவீணாவை கோபத்தில் தாக்க முயற்சித்துள்ளனர். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகின.

இந்நிலையில், அந்த வீடியோவை சமூ வலைதளங்களில் வெளியிட்ட மோசின் ஷேக் என்பவர் மீது 100 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு, நடிகை ரவீணா டாண்டன் சார்பில் நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. சிசிடிவி காட்சியில் ரவீனாவின் வாகனம், பெண்கள் மோதவில்லை என்றும், ஆனால், மோதியதாக அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டதாகவும் ரவீணாவின் வக்கீல் விளக்கம் அளித்திருக்கிறார்.

MUST READ