spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஇவ்ளோ அன்பு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல… ‘மாமன்னன்’ வரவேற்பால் ரவீனா நெகிழ்ச்சி!

இவ்ளோ அன்பு கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்ல… ‘மாமன்னன்’ வரவேற்பால் ரவீனா நெகிழ்ச்சி!

-

- Advertisement -

மாமன்னன் படத்தில் தனது கதாபாத்திரத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து ரவீனா நெகழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் வடிவேலு ஆகியோரின் நடிப்பில் வெளியான மாமன்னன் திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது. அதே சமயம் பேசு பொருளாகவும் மாறியது.
பஹத் பாசில் ரத்தினவேல் என்ற கதாபாத்திரத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். தற்போது படத்தின் ஹீரோ உதயநிதி, வடிவேலுவை மிஞ்சும் வகையில் ரத்தினவேலு கதாபாத்திரத்திற்கு மாஸாக எடிட் செய்து பல விடீயோக்களை பகிர்ந்து வருகின்றனர்.

we-r-hiring

அதேபோல மனைவியாக நடித்த ரவீனாவையும் வைத்து பல எடிட்களை பார்க்க முடிகிறது. டப்பிங் ஆர்டிஸ்ட்ஆன ரவீனாவுக்கு படத்தில் இரு டயலாக் கூட இல்லாததும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் ரவீனா கதாபாத்திரம் பலரை வெகுவாக கவர்ந்ததாகத் தெரிகிறது.

இந்நிலையில் அதீத வரவேற்பால் நெகிழ்ச்சி அடைந்துள்ள ரவீனா “இந்தக் கதாபாத்திரத்திற்கு இவ்வளவு அன்பு கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ஜோதி எப்போதும் என் இதயத்திற்கு நெருக்கமானவளாக இருப்பாள். நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

MUST READ