spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரவி மோகன் - ஆர்த்தி விவகாரம்.... நோட்டீஸ் மூலம் எச்சரித்த கெனிஷா!

ரவி மோகன் – ஆர்த்தி விவகாரம்…. நோட்டீஸ் மூலம் எச்சரித்த கெனிஷா!

-

- Advertisement -

சமீப காலமாக ரவி மோகன் – ஆர்த்தி விவகாரம் தான் பெரிய பேச்சு பொருளாக இருந்து வருகிறது. அந்த வகையில் ரவி – ஆர்த்தி விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் போய்க்கொண்டிருக்கும் போதே நடிகர் ரவி, பாடகி கெனிஷாவுடன் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.ரவி மோகன் - ஆர்த்தி விவகாரம்.... நோட்டீஸ் மூலம் எச்சரித்த கெனிஷா! அதே சமயம் இது தொடர்பாக ரவியின் மனைவி ஆர்த்தி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் பின்னர் ரவியும் பதில் அறிக்கை வெளியிட, ரவியின் மாமியார் சுஜாதா விஜயகுமாரும், ஆர்த்தியும் அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்டனர். அதன் பின்னர் ரவி – ஆர்த்தி இருவரும் தங்களுடைய விவகாரம் குறித்து பொதுவெளியில் அறிக்கை வெளியிடக்கூடாது என உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. அதே சமயம் சமூக வலைதளங்களில் யாரும் ரவி – ஆர்த்தி விவகாரம் குறித்து விவாதிக்கக்கூடாது எனவும் உத்தரவிட்டது. ரவி மோகன் - ஆர்த்தி விவகாரம்.... நோட்டீஸ் மூலம் எச்சரித்த கெனிஷா!இதற்கிடையில் கெனிஷா, “நான் நல்ல குடும்பத்தில் இருந்து வந்தவள். தைரியம் இருந்தால் என் முகத்தை பார்த்து என் மீதான விமர்சனங்களை முன் வையுங்கள்” என்று குறிப்பிட்டு பதிவு ஒன்றினை வெளியிட்டு இருந்தார். மேலும் கெனிஷாவுக்கு ஆன்லைனில் சில அச்சுறுத்தல்கள் வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் கெனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நோட்டீஸ் ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

 

View this post on Instagram

 

A post shared by KENEESHAA (@keneeshaa1)

அந்த நோட்டீஸில், “ஆன்லைனில் அவதூறு பேச்சுகள், கற்பழிப்பு, பாலியல் துன்புறுத்தல் கொலை மிரட்டல் விடுவோரின் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்லைனில் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகள் மற்றும் பதிவுகளை சம்பந்தப்பட்டவர்கள் 48 மணி நேரத்திற்குள் நீக்க வேண்டும். யூடியூப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் உள்ளிட்ட தளங்களில் என்னைப் பற்றி அவதூறு கருத்துக்களை அனுமதிக்க கூடாது. அனைத்து தளங்களிலிருந்தும் என்னைப் பற்றி அவதூறு கருத்துக்கள் நீக்கப்பட வேண்டும். இல்லையெனில் சம்பந்தப்பட்டவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ