spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபேராதரவை பெற்ற ரியோவின் ஜோ.... ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

பேராதரவை பெற்ற ரியோவின் ஜோ…. ஓடிடி ரிலீஸ் அப்டேட்!

-

- Advertisement -

ரியோ ராஜின் ஜோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

பேராதரவை பெற்ற ரியோவின் ஜோ.... ஓடிடி ரிலீஸ் அப்டேட்!தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வெள்ளி திரைக்கு வந்தவர் ரியோ ராஜ். இவர் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா எனும் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது ஹரிஹரன் ராம் இயக்கத்தில் ஜோ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். உணர்வுபூர்வமான காதல் கதையின் மூலம் ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் கவர்ந்துள்ளார் அறிமுக இயக்குனர் ஹரிஹரன் ராம். இந்த படம் கடந்த நவம்பர் 24ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கேரளாவிலும் ஜோ படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். விஷன் சினிமா ஹவுஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் சித்து குமார் இசையிலும் இப்படம் வெளியானது.பேராதரவை பெற்ற ரியோவின் ஜோ.... ஓடிடி ரிலீஸ் அப்டேட்! இந்நிலையில் மூன்று வாரங்களை கடந்து திரையரங்குகளில் வெற்றி கரமாக ஓடிக் கொண்டிருக்கும் ஜோ படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்த அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ