தனுஷ் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் தனுஷுடன் இணைந்து பிரியங்கா மோகன், சிவராஜ்குமார், ஜான் கொக்கேன், நிவேதிதா சதீஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். தனுஷின் கேரியரிலேயே மிகவும் முக்கியமான படமாக இப்படம் உருவாகியுள்ளது. அந்த வகையில் இப்படம் மூன்று பாகங்களாக வெளியாக இருக்கிறது.
மேலும் இந்த படத்தின் டீசர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எக்கச்சக்கமாக அதிகரித்துள்ளது. மேலும் இப்படம் வருகின்ற பொங்கல் தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் நிலையில் தனுஷ் தனது எக்ஸ் தளத்தில் “கேப்டன் வில்லன் ட்ரைலர் விரைவில்” என அப்டேட் கொடுத்துள்ளார். இந்த அப்டேட் ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.
Captain Miller .. Trailer soon. Pongal release. pic.twitter.com/45l4xLP5uj
— Dhanush (@dhanushkraja) December 13, 2023
அதுமட்டுமில்லாமல் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா அடுத்த ஆண்டு ஜனவரி 3ம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. இருப்பினும் இது குறித்து அறிவிப்பை படக்குழிவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.