spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாராஷ்மிகாவை குறிவைக்கும் ரிஷப் ஷெட்டி? கன்னட திரையுலகை விட்டுக்கொடுக்காத ரிஷப்...

ராஷ்மிகாவை குறிவைக்கும் ரிஷப் ஷெட்டி? கன்னட திரையுலகை விட்டுக்கொடுக்காத ரிஷப்…

-

- Advertisement -
கடந்த ஆண்டு ரிஷப் செட்டி நடிப்பிலும், இயக்கத்திலும் வெளியான திரைப்படம் காந்தாரா. இந்தியா முழுவதும் மிகப்பெரிய அளவில் இப்படம் பேசப்பட்டது. இந்தப் படத்தை கே ஜி எஃப் 1, கே ஜி எஃப் 2 படங்களை தயாரித்த கோம்பாலை ஃபிலிம் நிறுவனம் தயாரித்திருந்தது. கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய் பொருட்செலவில் உருவாக்கப்பட்ட இப்படம் இந்தியா முழுவதும் 400 கோடி வசூல் செய்தது. மண் மற்றும் மக்களின் சமய நம்பிக்கையை மையமாக வைத்த கதைக்களத்தில் இப்பாடம் உருவாகி இருந்தது.

சமீபகாலமாக காந்தாரா 2 படம் குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வருகின்றன. அதன்படி காந்தாரா படத்தின் இரண்டாம் பாகம் முதல் பாகத்தில் தொடர்கதையாக இல்லாமல் அதற்கும் முன் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. அதே சமயம் ரிஷப் ஷெட்டி, நிறைய ஆராய்ச்சிகளுக்கு பிறகு காந்தாரா 2 படத்தின் ஸ்கிரிப்ட் எழுதும் பணிகளை முடித்துவிட்டாராம். மேலும், படப்பிடிப்பு டிசம்பரில் தொடங்கவுள்ளது. அண்மையில் படத்தின் முதல் தோற்றம் வெளியானது.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேட்டி அளித்த நடிகர் ரிஷப் ஷெட்டி, மற்றவர்களை போல ஒரு திரைப்படத்தில் வெற்றி கண்டதும், கன்னட திரையுலகை விட்டு விலக விருப்பம் எனக்கு இல்லை என்று கூறியிருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு ராஷ்மிகா மந்தனா கன்னட சினிமாவை ஒதுக்குவதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பாக ரிஷப் ஷெட்டியும் கூறியிருந்தார். இதனால், தற்போது ரிஷப் ஷெட்டி மற்றவர்களை போல என குறிப்பிடுவது ராஷ்மிகா மந்தனாவையா? என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கமெண்ட் செய்து வருகின்றனர். கன்னடத்தில் கிரிக்பார்ட்டி என்றபடத்தின் மூலம் அறிமுகமானவர் ராஷ்மிகா. இந்த படத்தை இயக்கியவர் ரிஷப் ஷெட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ