spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஆர் ஜே பாலாஜியின் 'சிங்கப்பூர் சலூன்'... ரிலீஸ் எப்போது?

ஆர் ஜே பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’… ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

ஒரு ரேடியோ ஜாக்கியாக இருந்து தற்போது தமிழ் சினிமாவில் வெற்றி படங்களை கொடுத்து வரும் கதாநாயகனாக உருவெடுத்துள்ளவர் ஆர். ஜே.பாலாஜி. இவருடைய ரேடியோ வர்ணனைக்கும் கிரிக்கெட் கமெண்ட்ரிக்கும் ஒரு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
தொடக்கத்தில் விஜய் சேதுபதியின் “நானும் ரவுடிதான்” ,கார்த்தி- மணிரத்தினம் கூட்டணியில் வெளியான “காற்று வெளியிடை” போன்ற படங்களில் ஹீரோவின் நண்பராக நடித்து வந்தார்.
பின்னர் எல்கேஜி படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி ஆனார். அரசியல் நகைச்சுவை பின்னணியில் உருவான இப்படம் நல்ல வெற்றியை பெற்று தந்தது . அதன் பின்னர் நயன்தாராவுடன் இணைந்து மூக்குத்தி அம்மன் திரைப்படத்தில் நடித்தார். இப்படமும் ஹிட்டானது. தொடர்ந்து வீட்டுல விசேஷம், ரன் பேபி ரன் போன்ற படங்களும் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி படங்களாகவே அமைந்தன.

ஆர் ஜே பாலாஜி தற்போது இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா, ஜூங்கா படங்களை இயக்கிய இயக்குனரான கோகுல் இயக்கத்தில் “சிங்கப்பூர் சலூன்” என்னும் படத்தில் நடித்துள்ளார்.சலூனில் முடி திருத்தும் கலைஞராக இப்படத்தில் ஆர் ஜே பாலாஜி நடித்துள்ளார்.ஷிவானி நாராயணன் கதாநாயகியாகவும் சத்யராஜ், லால் ,ரோபோ சங்கர் போன்றோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தில் பிரபல இயக்குனரும் ஆர் ஜே பாலாஜியின் நண்பருமான லோகேஷ் கனகராஜ் கௌரவத் தோற்றத்தில் நடித்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்தன.
வேல்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஐசரி கணேஷ் இப்படத்தை தயாரித்து வருகிறார். காமெடி, ஃபீல் குட் படமாக உருவாகியுள்ள சிங்கப்பூர் சலூன் வரும் ஜூலை மாதம் 28ஆம் தேதி திரையரங்குகளில் வெளி வெளியாக உள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ