ரோபோ சங்கர் மகள் இந்திரஜாவின் நிச்சயதார்த்தம் கோலாகலமாக நேற்று நடந்து முடிந்தது.
பிரபல நடிகரான ரோபோ சங்கர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் அறியப்பட்டவர். அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியிலும் இவர் போட்டியாளராக கலந்து கொண்டார். அரவிந்துடன் இணைந்து ரோபோ சங்கர் அடிக்கும் லூட்டி அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்.
அதைத் தொடர்ந்து சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் நடுவராகவும் பணியாற்றி இருக்கிறார். அதே சமயம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, மாரி, புலி உள்ளிட்ட பல படங்களில் குணசேத்திர வேடங்களில் நடித்துள்ளார். மேலும் சில படங்களிலும் நடித்துள்ளார் ரோபோ சங்கர். சமீபத்தில் வெளியான ஆர்.ஜே பாலாஜியின் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்தில் ரோபோ சங்கர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதற்கிடையில் பிரியங்கா என்பவரை திருமணம் செய்து கொண்ட ரோபோ சங்கருக்கு இந்திரஜா சங்கர் என்ற ஒரு மகள் இருக்கிறார். இந்திரஜா சங்கர், கடந்த 2019 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பிகில் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் பாண்டியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர்தான் இந்திரஜா. 
இந்திரஜாவிற்கு, அவர்களின் உறவினர் கார்த்திக் என்பவருடன் ஏற்கனவே திருமணம் முடிவு செய்யப்பட்பட்டிருந்த நிலையில் நேற்று இவர்களின் நிச்சயதார்த்தம் இரு வீட்டாரின் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இது சம்பந்தமான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


