ஆசிய திரைப்பட விருதுகளுக்கு தேர்வான மணிரத்னம் படம்
- Advertisement -
மணிரத்னம் வழங்கிய பாரடைஸ் திரைப்படம் ஆசிய திரைப்பட விருதுகளில் நான்கு பிரிவுகளில் தேர்வாகி இருக்கிறது.

நியூட்டன் சினிமா தயாரித்து வெளியான திரைப்படம் பாரடைஸ். மணிரத்னம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் வழங்கிய இப்படத்தில் ரோஷன் மேத்யூ, தர்ஷனா ராஜேந்திரன், ஷியாம் மற்றும் மகேந்திர பெரோரா ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். பிரசன்னா படத்தை இயக்கி இருக்கிறார். ராஜீவ் ரவின் ஒளிப்பதிவு, கே இன் இசை, தபஸ் நாயக் ஒலி வடிவமைப்பு செய்திருக்கிறார். பாரடைஸ் திரைப்படம் வௌியாக உள்ளது. படம் வௌியாவதற்கு முன்பாகவே பல விருது வழங்கும் விழாக்களில் தேர்வாகி வருகிறது.

அந்த வகையில் 17-வது ஆசிய திரைப்பட விருதுகளில் நான்கு பிரிவுகளில் இத்திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது. சிறந்த இயக்குநர், சிறந்த திரைக்கதை, சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த எடிட்டர் ஆகிய 4 பிரிவுகளில் படம் தேர்வாகி இருக்கிறது. ஆசிய திரைப்பட விருது விழா, திரைத்துறையிலும் திரைத்துறையினர்கள் மத்தியிலும் மிகவும் மதிப்பு மிக்க விழாவாக கருதப்படுகிறது. சினிமா சாதனைகள், கலாச்சார பன்முகத்தன்மை, சிறந்த கலைகளை வெளிக்காட்டும் திரைப்படங்களை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இந்நிலையில், இந்த விழாவில் பாரடைஸ் திரைப்படம் பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது பெரிய அங்கீகாரமாக பார்க்கப்படுகிறது.