spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஆஸ்கர் விருதை வென்ற ’நாட்டு நாட்டு’ பாடல்

ஆஸ்கர் விருதை வென்ற ’நாட்டு நாட்டு’ பாடல்

-

- Advertisement -

ஆஸ்கர் விருதை வென்ற ’நாட்டு நாட்டு’ பாடல்

95வது ஆஸ்கர் விருதுகள் இன்று அமெரிக்காவில் இந்திய நேரப்படி காலை 5.30 மணிக்கு தொடங்கியது. 

அகாடமி விருது எனப்படும் 95-ஆவது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் நடைபெற்றது. லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி தியேட்டரில் 95வது அகாடமி விருதுகளை ஜிம்மி கிம்மல் தொகுத்து வழங்கினார். மேலும் பல ஹாலிவுட் படங்கள் கலந்து கொள்ளும் இந்த விருதுகளில், இந்தியாவில் இருந்து மூன்று படங்கள் தேர்வாகி இருந்தன.

we-r-hiring

சிறந்த பாடல் (Best Original Song) பிரிவில் RRR படத்தின் நாட்டு நாட்டு பாடலும், சிறந்த ஆவணக் குறும்படம் (Best Documentory Short Film) பிரிவில் Kartiki Gonsalves இயக்கியுள்ள, Elephant Whispers படமும், சிறந்த ஆவணப்படம் (Best Documentory Feature) பிரிவில், Shaunak Sen இயக்கியுள்ள All That Breathes படமும் போட்டியிட்டது.


இதில் ராஜமவுலி இயக்கத்தில் ஜூனியர் என்டிஆர் ராம்சரண் அலியா பட் ஆகியோர் நடிப்பில் கடந்த ஆண்டு மார்ச் 24ஆம் தேதி திரைக்குவந்த ஆர் ஆர் ஆர் திரைப்படத்தின் நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. இந்த பாடல் பாடல் ஏற்கனவே கோல்டன் குளோப் விருதை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கீரவாணி இசையில் தெலுங்கில் சந்திரபோஸ் வரிகளில் உருவான நாட்டு நாட்டு பாடலை ராகுல் மற்றும் காலபைரவா ஆகியோர் இணைந்து பாடியுள்ளனர். இந்த பாடலுக்கு பிரேம் ரக்ஷித் நடன இயக்குனராக இருந்துள்ளார்.

MUST READ