spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசாட்டை பட நடிகருக்கு திடீர் திருமணம்... திரையுலகினர் வாழ்த்து...

சாட்டை பட நடிகருக்கு திடீர் திருமணம்… திரையுலகினர் வாழ்த்து…

-

- Advertisement -
சாட்டை படத்தில் நடித்து பிரபலம் அடைந்த நடிகர் யுவன் எனும் அஜ்மல் கானுக்கு திருமணம் நடைபெற்று முடிந்தது.

தமிழில் வெளியான சாட்டை படத்தின் மூலம் அறிமுகமானவர் யுவன். எம். அன்பழகன் இயக்கியிருந்த படத்தில் சமுத்திரக்கனி, மஹிமா நம்பியார், தம்பி ராமையா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படத்தில் கவனம் பெற்ற நடிகர் யுவன், அடுத்தடுத்து கமர்கட்டு, கீரிப்புள்ள, இளமி, அய்யனார் வீதி ஆகிய திரைப்படங்களில் நடித்து உள்ளார். இதைத் தொடர்ந்து பல படங்களில் அவர் குணச்சித்திர வேடங்களிலும் அவர் நடித்துள்ளார்.

we-r-hiring
இந்நிலையில், யுவனுக்கும், கும்பகோணம் தங்க விலாஸ் அதிபர் சாதிக் அலி மகள் ரமீசா என்பவருக்கும் திருமணம் நடைபெற்று முடிந்தது. இதைத் தொடர்ந்து சென்னையில் இருவரின் வரவேற்பு நிகழ்ச்சியும் பிரம்மாண்டமாக நடைபெற்றது. விஜிபி ரிசார்ட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் திரைப்பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர், சீமமான், உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், மன்சூர் அலிகான், உமா ரியாஸ்கான், இசைமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்பட திரைப் பிரபலங்களும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர். ரசிகர்கள் பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

MUST READ