- Advertisement -
ஆதி நடிப்பில் உருவாகியுள்ள சப்தம் படத்தின் முதல் தோற்றம் இணையத்தில் வெளியானது.
2009-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ஈரம். இப்படத்தில் ஆதி, ரம்யா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. ஈரம் பட கூட்டணி மீண்டும் புதிய படத்தில் இணைந்தது. இதற்கு சப்தம் என தலைப்பு வைக்கப்பட்டது. இதில் ஆதியுடன் இணைந்து சிம்ரன், லைலா, லட்சுமிமேனன், அபிநயா, ரெடின் கிங்ஸ்லி மற்றும் பலர் நடிக்கின்றனர். 7 ஜி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. தமன் படத்திற்கு இசை அமைக்கிறார்.
