Homeசெய்திகள்சினிமாமுதல் முறையாக விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் சாய்பல்லவி

முதல் முறையாக விஜய் தேவரகொண்டாவுடன் இணையும் சாய்பல்லவி

-

- Advertisement -
தில் ராஜூ தயாரிப்பில் விஜய் தேவரகொண்டா நடிக்கும் புதிய படத்தில் சாய் பல்லவி இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது.

யூ டியூப் வீடியோக்கள் மூலம் பிரபலமாகி பின்னர் டோலிவுட் திரையில் அறிமுகமானவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த பெல்லிசோப்புலூ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த விஜய்க்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கினர். சந்தீப் ரெட்டி வங்காவுடன் இணைந்து விஜய் நடித்த அர்ஜூன் ரெட்டி திரைப்படம் எதிர்பார்க்காத வகையில் மாபெரும் ஹிட் படமாக அமைந்தது.

தெலுங்கு மட்டுமன்றி தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படம் வரவேற்பை பெற்றது. இப்படம் தமிழ் மற்றும் இந்தி மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் வெற்றி விஜய் தேவரகொண்டாவை முன்னணி நடிகராக முன்னிறுத்தியது. லிகர் படத்தின் மூலம் அவர் பாலிவுட்டுக்கும் அறிமுகமானார். இப்படத்தை கரண் ஜோகர் தயாரித்து இருந்தார். விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா நடிப்பில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து பேமிலி ஸ்டார் வெளியானது.

அண்மையில், தில் ராஜூ இயக்கும் புதிய திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இத்திரைப்படத்தை, ரவிகிரண் கோலா இயக்குகிறார். தில் ராஜூவுடன் விஜய் தேவரகொண்டா இணையும் இரண்டாவது படம் இதுவாகும். இந்நிலையில், இத்திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவலில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ