Homeசெய்திகள்சினிமாசீதையாக நடிக்கும் சாய் பல்லவி......லேட்டஸ்ட் அப்டேட்!

சீதையாக நடிக்கும் சாய் பல்லவி……லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

நடிகை சாய் பல்லவி சீதையாக நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

சினிமாவில் ராமாயணம், மகாபாரதம் போன்ற இதிகாசங்களை அடிப்படையாக வைத்து பல படங்கள் உருவாகி வருகிறது. முன்னதாக நந்தமுரி பாலகிருஷ்ணா மற்றும் நயன்தாரா நடிப்பில் ஸ்ரீ ராம ஜெயம் திரைப்படம் ராமாயண கதையை மையமாக வைத்து வெளியானது. சமீபத்தில் பிரபாஸ் நடிப்பில் ஆதிபுருஷ் திரைப்படம் வெளியானது.

இதற்கிடையில் மீண்டும் ஒரு ராமாயண கதையை அடிப்படையாகக் கொண்டு ரன்பீர் கபூர் நடிப்பில் புதிய படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியானது. அதன்படி நித்தேஷ் திவாரி இந்த படத்தை இயக்க இருப்பதாகவும் இதில் சீதையாக ஆலியா பட் நடிக்க உள்ளதாகவும் கூறப்பட்டது.

ஆனால் தற்போது ஆலியா பட் -க்கு பதிலாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும் நடிகர் யாஷ் இதில் ராவணனாக நடிக்க போகிறார் என்று கூறப்படுகிறது. ஆனால் ஏற்கனவே யாஷ் இதனை மறுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது. எனினும் இது குறித்த அறிவிப்பு வந்தால் மட்டுமே இதற்கான விடை கிடைக்கும் என்று பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

சாய் பல்லவி தற்போது சிவகார்த்திகேயனின் SK 21 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் நாக சைத்தன்யாவின் NC23 படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகி உள்ளார்.

MUST READ