Homeசெய்திகள்சினிமாகாதலரை அறிமுகம் செய்த நடிகை சாய் பல்லவியின் தங்கை... குவியும் வாழ்த்துக்கள்! காதலரை அறிமுகம் செய்த நடிகை சாய் பல்லவியின் தங்கை… குவியும் வாழ்த்துக்கள்!
- Advertisement -

மலர் டீச்சரை யாரும் மறந்திருக்க முடியாது. அந்த அளவிற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது அந்த கதாபாத்திரம். மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருப்பார். இப்படத்தின் மூலமாகவே அவர் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகினார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த சாய் பல்லவி அடுத்து தமிழில் மாரி 2 படத்தில் நடித்தார். அடுத்து தியா, என்ஜிகே, பாவ கதைகள், கார்கி, படத்தில் நடித்திருந்தார்.

தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் வெளியான லவ்வர் மற்றும் பிடா ஆகிய படங்கள் அனைத்து மொழிகளிலும் பெரிய ஹிட் அடித்தன. தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்துவருகிறார். அவரது தங்கை பூஜா கண்ணனும் ஏ.எல்.விஜய் இயக்கிய சித்திரை செவ்வானம் என்ற படத்தில் நடித்து நடிகையாக அறிமுகமாகினார். தொடர்ந்து படங்களில் நடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்தி வந்தார்.

இந்நிலையில், அவர் காதலில் விழுந்துவிட்டதாகவும், விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதை உறுதி செய்யும் வகையில் பூஜா கண்ணன், தனது சமூக வலைதளப்பக்கத்தில் காதலருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.