Homeசெய்திகள்சினிமாகத்ரினா கைஃப் பாடலுக்கு சாய்பல்லவி நடனம்... புதிய வீடியோ வைரல்...

கத்ரினா கைஃப் பாடலுக்கு சாய்பல்லவி நடனம்… புதிய வீடியோ வைரல்…

-

பிரபல பாலிவுட் நடிகை கத்ரினா கைஃப் பாடலுக்கு, சாய்பல்லவி நடனமாடியிருக்கும் காணொலி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா மட்டுமல்ல, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் சாய் பல்லவிக்கு ரசிகர்கள் ஏராளம். நடிகையாக மட்டுமன்றி அவரது சிம்ப்லிசிட்டியை பிடித்தவர்கள் ஏராளம். மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருப்பார். இப்படத்தின் மூலமாகவே அவர் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகினார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த சாய் பல்லவி அடுத்து தமிழில் மாரி 2 படத்தில் நடித்தார். அடுத்து தியா, என்ஜிகே, பாவ கதைகள், கார்கி, படத்தில் நடித்திருந்தார்.

கோலிவுட் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் ஆதிக்கம் செலுத்தும் முன்னணி நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. தெலுங்கில் அவர் நடித்த பல படங்கள் மாபெரும் ஹிட் அடித்துள்ளன. தற்போது சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக புதிய படத்தில் நடித்துவருகிறார். இதுதவிர தெலுங்கில் நாக சைதன்யா நடிக்கும் புதிய படத்திலும் அவர் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை சாய்பல்லவி கல்லூரி படித்தபோது, விழாவில் நடனமாடிய காணொலி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. அதில் அக்சய் குமார் மற்றும் கத்ரினா கைப் நடிப்பில் வெளியான டீஸ் மார் கான் பாடலுக்கு அவர் நடனமாடியிருப்பார்.

MUST READ