Homeசெய்திகள்சினிமாஷாருக்கான் உடன் மோதும் பிரபாஸ்..... 'சலார்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஷாருக்கான் உடன் மோதும் பிரபாஸ்….. ‘சலார்’ புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

-

சலாம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரபாஸ் நடிப்பில் சலார் திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் பிரபாஸ் உடன் இணைந்து ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ், ஜெகபதிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கே ஜி எஃப் படங்களை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்கும் இந்த படத்தை ஹோம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. சலார் PART 1 CEASE FIRE என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதைத் தொடர்ந்து இந்த படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாக இருப்பதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையாத காரணத்தால் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் வருகின்ற டிசம்பர் 22ஆம் தேதி சலார் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஷாருக்கானின் டுங்கி திரைப்படமும் டிசம்பர் 22 இல் வெளியாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சலார் மற்றும் டுங்கி இரண்டு படங்களும் ஒரே நாளில் மோத இருக்கின்றன. நிச்சயம் இரு படங்களுமே 1000 கோடி கிளப்பில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ