- Advertisement -
கேஜிஎஃப் படத்தின் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல். கேஜிஎஃப் முதல் பாகத்தின் தொடர்ச்சியாக வெளியான கேஜிஎப் சேப்டர் 2, ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து இந்திய அளவில் சாதனை படைத்தது. கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என திரும்பிய பக்கமெல்லாம் ராக்கி பாய் ராஜ்ஜியம் தான். தன் தாய்க்கு அளித்த வாக்கின்படி மிகப் பெரிய பணக்காரனாவதை லட்சியமாகக் கொண்ட சிறுவன் இந்தியாவே தேடிக் கொண்டிருக்கும் கேங்ஸ்டராக மாறி தன் லட்சியத்தை எவ்வாறு அடைந்தான் என்பதுதான் கேஜிஎஃப் 1,2 படங்களின் கதை. இதைத்தொடர்ந்து இயக்குனர் பிரசாந்த் நீல் , பிரபாஸ் நடிப்பில் இயக்கி வரும் சலார் படத்திற்கு இமாலய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. பாகுபலி படத்தின் மூலம் ஆயிரம் கோடியை சாதித்த கதாநாயகன் பிரபாஸும், கே ஜி எஃப் படங்களின் மூலம் ஆயிரம் கோடியை தொட்ட இயக்குனரான பிரசாந்த் நீலும் இணைந்ததே இப்படத்தின் மீது ஒரு பெரிய எதிர்பார்ப்பு நிலவ காரணம். இந்த சலார் படமும் ஒரு ஆக்சன் படமாக தான் உருவாகியுள்ளது. படத்தில் பிரபாஸ் மற்றும் பிரித்விராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.




