பிரபாஸின் சலார் திரைப்படத்தின் டிரைலர் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரபாஸ் தற்போது ப்ராஜெக்ட் கே திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதே சமயம் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது ரவி பசூர் இதற்கு இசை அமைக்கிறார். இதில் பிரபாஸுடன் இணைந்து ஸ்ருதிஹாசன், ஜெகதீபாபு, உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் இப்படம் வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது.
சலார் PART 1 CEASE FIRE என்று தலைப்பிடப்பட்டுள்ள இந்த படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. மேலும் கடந்த மாதம் இந்த படத்தின் டிரைலர் இந்த ஆகஸ்ட் மாத இறுதியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது ஒரு சில காரணங்களால் சலார் ட்ரைலர் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. எனவே டிரைலர் எப்போது ரிலீஸ் ஆகும் என்பதை படக்குழுவினர் விரைவில் அறிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் செப்டம்பர் 28ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.