Homeசெய்திகள்சினிமா2-வது திருமணம் செய்யும் ஐடியா இருக்கா?... ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் ஷாக் பதில்!

2-வது திருமணம் செய்யும் ஐடியா இருக்கா?… ரசிகரின் கேள்விக்கு சமந்தாவின் ஷாக் பதில்!

-

நடிகை சமந்தா இந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர். இவர் கடைசியாக யசோதா திரைப்படத்திலும் குஷி திரைப்படத்திலும் நடித்திருந்தார். விஜய் தேவரகொண்டா சமந்தா கூட்டணியில் வெளியான குஷி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழில் விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். இப்போது கைவசம் ‘சிட்டாடெல்’ இணைய தொடரில் நடித்து வருகிறார். இதன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகினறன. இதையடுத்து டிராலாலா மூவிங் பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி இருப்பதாக அண்மையில் அவர் அறிவித்திருந்தார்.

சினிமாவில் கனவம் செலுத்தி வந்தவருக்கு மையோசிடிஸ் எனும் தடை குறைபாட்டு நோய் ஏற்பட்டது. இதற்காக அடிக்கடி வெளிநாடுகளுக்கு சென்று சமந்தா சிகிச்சை பெற்று வருகிறார். பிசினஸ், ஆன்மிக பயணம், சுற்றுலா, தயாரிப்பு நிறுவனம் என பிஸியாக இருக்கும் சமந்தா அவ்வப்போது காதல் கிசுகிசுக்களிலும் சிக்குவது உண்டு. இந்த நிலையில் ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேசியுள்ளார் சமந்தா. அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அப்போது, ரசிகர் ஒருவர் மறுமணம் குறித்து கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த சமந்தா, புள்ளிவிவரங்களின்படி அது ஒரு தவறான முடிவாக இருக்கும் என கூறியிருக்கிறார். மேலும், மறுமணம் செய்து தோல்வியில் முடிந்த புள்ளிக்கணக்குகளையும் அவர் அத்துடன் இணைத்து பதிவிட்டுள்ளார்.

பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் சமந்தா. பின்பு 2021-ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணாக இருபவரும் பிரிவதாக அறிவித்திருந்தனர். அதன்படி இருவரும் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

MUST READ