சமந்தாவின் கேரியர் ‘முடிந்து விட்டது’ என்று தெலுங்கு தயாரிப்பாளர் பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமந்தா நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள சாகுந்தலம் படம் மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை. சுமார் 80 கோடி ரூபாய் பட்ஜெட்டில் சரித்திரப் படமாக இந்த படம் 10 கோடியை கூட வசூல் செய்யவில்லை. படத்தின் தயாரிப்பாளர்களுக்கு இந்தப் படம் ஒரு பெரிய இழப்பு ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் சமந்தா எமோஷனல் ஆக பேசி படங்களை ஓட வைக்க முயற்சிக்கிறார் அது இனிமேல் நடக்காது,அவர் சினிமா கேரியர் முடிந்துவிட்டது என்று தெலுங்கு தயாரிப்பாளர் சிட்டி பாபு பேசியுள்ளார்.
ஒரு ஆன்லைன் மீடியா சேனலிடம் பேசிய அவர், “சமந்தா விவாகரத்துக்குப் பிறகு புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு கவர்ச்சியாக நடனம் ஆடினார். அதை அவர் தனது வாழ்வாதாரத்திற்காக செய்தார். ஸ்டார் ஹீரோயின் அந்தஸ்தை இழந்த பிறகு, அவருக்கு வரும் படங்களில் தான் அவர் நடித்து வருகிறார். ஹீரோயினாக அவரது வாழ்க்கை முடிந்துவிட்டது. சமந்தாவால் மீண்டும் நட்சத்திர அந்தஸ்துக்கு திரும்ப முடியாது. வரும் படங்களை மட்டும் செய்து கொண்டே தான் சினிமாவில் அவர் இருக்க முடியும்.

“யசோதா படத்தின் புரமோஷன்களின் போது, சமந்தா கண்ணீர் சிந்தினார். அதை வைத்து படத்தை ஓட வைக்க முயற்சி செய்தார். சாகுந்தலம் படத்தின் ப்ரோமோஷனிலும் அதையே செய்தார். நான் இறப்பதற்கு முன், சாகுந்தலம் மாதிரி ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பினேன் என்று பேசி அனுதாபம் பெற முயன்றார். ஒவ்வொரு முறையும், இந்த செண்டிமெண்ட் வேலை செய்யாது. கதாபாத்திரமும் படமும் நன்றாக இருந்தால் மக்கள் பார்ப்பார்கள். இதெல்லாம் தாழ்வான மற்றும் பைத்தியக்காரத்தனமான செயல்கள். கதாநாயகி அந்தஸ்தை இழந்த சமந்தாவை சாகுந்தலம் கதாபாத்திரத்திற்கு எப்படி தேர்வு செய்தார்கள் என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.” என்று பேசியுள்ளார்.
தயாரிப்பாளர் சிட்டி பாபுவின் பேச்சு சமந்தாவின் ரசிகர்களுக்குப் பிடிக்கவில்லை. எனவே அவரை வறுத்தெடுத்து வருகின்றனர்.