Homeசெய்திகள்சினிமாமீண்டும் ஒரு அப்பா பாசம்… சமுத்திரகனியின் ‘விமானம்’ படம் எப்படி இருக்கு?

மீண்டும் ஒரு அப்பா பாசம்… சமுத்திரகனியின் ‘விமானம்’ படம் எப்படி இருக்கு?

-

சமுத்திரக்கனி, கடந்த 2009 ஆம் ஆண்டு வெளிவந்த ‘நாடோடிகள்’ படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர். இவர் இயக்குனர் மட்டுமல்லாமல் நடிப்பிலும் ஆர்வம் காட்டி அப்பா, சாட்டை உள்ளிட்ட வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.

தற்போது இவர் ‘விமானம்‘ என்னும் திரைப்படத்தில் மாற்றுத்திறனாளியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் இவருடன் அனுசுயா பரத்வாஜ், மீரா ஜாஸ்மின், தன்ராஜ், ராகுல் ராமகிருஷ்ணா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தை இயக்குனர் சிவப்பிரகாஷ் என்னலா இயக்கியுள்ளார். கேகே கிரியேட்டிவ் ஒர்க்ஸ் மற்றும் ஜி ஸ்டூடியோ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு சரண் அர்ஜுன் இசையமைத்துள்ளார்.

இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தின் கதையானது, குடிசை பகுதிகளில் மனைவியை இழந்து வாழும் சமுத்திரக்கனி கட்டண கழிவறை ஒன்றை நடத்தி வருகிறார். இவருக்கு நான்காம் வகுப்பு படிக்கும் மகன் இருக்கின்றான். மகனாக நடித்துள்ள துருவனுக்கு விமானம் என்றால் அதிக விருப்பம். விமானத்தில் பயணிக்க வேண்டும் எனவும் பைலட் ஆக வேண்டும் எனவும் பல கனவுகளுடன் வாழ்ந்து வருகிறான்.

மாற்றுத்திறனாளியான சமுத்திரக்கனி தன் மகனின் கனவை நனவாக்கினாரா? என்பதே விமானம் படத்தின் கதையாகும்.

இந்தப் படத்தில் சமுத்திரக்கனி, ஏழ்மையான குடும்பத் தலைவனாகவும் தன் மகனுக்காக பாசமழை பொழியும் தந்தையாகவும் தனக்கான கதாபாத்திரத்தில் நன்றாகவே நடித்துள்ளார். மேலும் உடல் ரீதியாக கஷ்டங்களை அனுபவிக்கும் வகையிலாக அமைந்துள்ள இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. நாள்தோறும் ஒருவேளை உணவிற்காக கஷ்டப்படும் அப்பா மகன் சென்டிமென்ட் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

அனுசுயா பரத்வாஜின் கதாபாத்திரம் இப்படத்திற்கு தேவையற்றதாக இருந்தாலும் தனக்கான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

மேலும் மொட்ட ராஜேந்திரன் ராகுல் ராமகிருஷ்ணா இவர்களின் காமெடி இப்படத்தில் ஓவராக காட்டப்பட்டு ரசிகர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது.
சரண் அர்ஜுனன் இசை சீரியல் பார்க்கும் உணர்வையே இந்த படம் முழுவதும் கொண்டு செல்கிறது.

மொத்தத்தில் அடுத்தடுத்த காட்சிகள் என்னவென்று யோசிக்க கூடிய அளவில் இருக்கும் திரைக்கதையுடன் ஏற்கனவே பார்த்து சலித்த படம் போலவே அமைந்துள்ளது.

MUST READ