தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ்.
இவர் நடிப்பது மட்டுமில்லாமல், தயாரிப்பு, இயக்கம், பாடல் பாடுவது, பாடல் எழுதுவது என பன்முகத் திறமைகளை உள்ளடக்கியவர். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் ‘கேப்டன் மில்லர்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் தனுஷுடன் பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், சிவராஜ் குமார், நிவேதிதா ,சதீஷ் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இத்திரைப்படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
மேலும் இத்திரைப்படம் இந்த ஆண்டின் இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 2017 ஆம் ஆண்டு வெளிவந்த ப. பாண்டி திரைப்படத்தில் தனுஷ் இயக்கி நடித்திருந்தார். இதில் ராஜ்கிரண், ரேவதி, மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு தனுஷ் தனது 54 வது படத்தை இயக்கி நடிக்க உள்ளார். இந்தப் படத்தில் விஷ்ணு விஷால்,
துஷாரா விஜயன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர்.
இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா தனுஷுக்கு அண்ணனாக நடிக்க இருக்கிறார்.
கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து நடித்த சந்தீப் கிஷன் இந்த படத்தில் தனுஷுக்கு தம்பியாக நடிக்கப் போகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.