சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
சந்தானம் நடிப்பில் டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் கடந்த ஜூன் 28ஆம் தேதி வெளியானது. இந்த படத்தை இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். ஆர் கே என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பிலும் ஆஃப்ரோ இசையிலும் இப்படம் உருவாகியுள்ளது. இதில் சந்தானத்துடன் இணைந்து சுரபி, முனீஸ்காந்த், மொட்ட ராஜேந்திரன், ரெடி கிங்ஸ்லி மற்றும் பலர் நடித்துள்ளனர். காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகிய இந்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக அமைந்தது.

மேலும் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதுவரை சந்தானம் நடித்த திரைப்படங்களில் இந்த படம் சந்தானத்திற்கு பிளாக்பஸ்டர் ஹிட் படமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி ஜீ 5 ஓ டி டி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.