Homeசெய்திகள்சினிமாகிக் வேற மாதிரி படம், டிடி ரிட்டனர்ஸ் படம் கூட கம்பேர் பண்ணாதீங்க… நடிகர் சந்தானம்...

கிக் வேற மாதிரி படம், டிடி ரிட்டனர்ஸ் படம் கூட கம்பேர் பண்ணாதீங்க… நடிகர் சந்தானம் வேண்டுகோள்!

-

சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளியான ‘டிடி ரிட்டன்ஸ்’ திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து ‘கிக்’ எனும் படத்தில் சந்தானம் நடித்துள்ளார். இந்தப் படத்தை கன்னட இயக்குனர் பிரசாந்த் ராஜ் இயக்கியுள்ளார்.
அருண் ஜான்யா இசையமைத்துள்ளார். இதில் சந்தானத்திற்கு ஜோடியாக தான்யா ஹோப் நடித்துள்ளார். மேலும் செந்தில், கோவை சரளா மன்சூர் அலிகான், தம்பி ராமையா, ஒய் ஜி மகேந்திரன், பிரம்மானந்தம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஆக்சன் காமெடி கலந்த கதை களத்தில் இப்படம் உருவாகியுள்ளது. இப்படம் வருகின்ற செப்டம்பர் 1ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
சமீபத்தில் இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய சந்தானம்,
“தயாரிப்பாளர் நவீன் ராஜ் மற்றும் இயக்குநர் பிரசாந்த்ராஜ் இருவரும் என்னை பாண்டிச்சேரி வரை தேடிவந்து கண்டுபிடித்துக் கதை சொன்னார்கள். படத்தின் கதையைப் போல அவர்கள் பேசும் தமிழ் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.
இதுவரை நான் நடித்த படங்களில் எனக்கே இது ஒரு வித்தியாசமான படமாக இருக்கும். ஒரு பொண்ணுக்கும் பையனுக்குமான காதல் ஈகோ என்ற கான்செப்டில் தான் படம் உருவாகியிருக்கிறது.
தம்பிராமையா அண்ணன் இந்தப் படத்தில் பல வருடங்களுக்கு டிவியில் வரும் நிஜாம் பாக்கு விளம்பரத்தில் வருவது போல காட்சிக்கு காட்சி விதவிதமாக முகத்தை மாற்றி பல எக்ஸ்பிரஸன்கள் கொடுத்து ஆச்சரியப்படுத்துவார்.
மன்சூர் அலிகான் சார் ஒரு குழந்தைனு சொல்லலாம். ஹாலிவுட் படத்தில் ஒரு கிங் காங்கிடம் இளம்பெண் மாட்டிக்கொண்டது போல, இந்தப் படத்தில் மன்சூர் அலிகானிடம் நடிகர் கிங் காங் மாட்டிக் கொண்டார். அரண்மனை படத்திற்குப் பிறகு கோவை சரளாவுடன் அக்காவுடன் இணைந்து நடித்துள்ளேன்.
கர்நாடகாவின் அனிருத் என்று சொல்லும் அளவுக்கு அங்கே பெரிய ஹீரோக்களுடன் வேலை செய்து வரும் பிரபலமான இசையமைப்பாளர் அர்ஜுன் ஜான்யா அருமையான பாடல்களைக் கொடுத்திருக்கிறார்.
டிடி ரிட்டன்ஸ் படத்துடன் இதை ஒப்பிட வேண்டாம். இந்த கிக் வேற மாதிரி இருக்கும். சொல்லப்போனால் இது சந்தானம் படம் என்று சொல்வதை விட இயக்குநர் பிரசாந்த் ராஜ் படம் என்று தான் சொல்ல வேண்டும்” என்று பேசியுள்ளார்.

MUST READ