spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாவிஜய் ஆண்டனி பட இயக்குனருடன் கைகோர்க்கும் சந்தானம்..... ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

விஜய் ஆண்டனி பட இயக்குனருடன் கைகோர்க்கும் சந்தானம்….. ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

-

- Advertisement -

நகைச்சுவை நடிகரான சந்தானம் தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். கடைசியாக சந்தானம் நடிப்பில் வடக்குப்பட்டி ராமசாமி திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து சந்தானம், ஆர்யாவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் சந்தானத்தின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.விஜய் ஆண்டனி பட இயக்குனருடன் கைகோர்க்கும் சந்தானம்..... ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

கடந்த 2015 ஆம் ஆண்டு, விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான திரைப்படம் இந்தியா பாகிஸ்தான். இந்த படத்தில் விஜய் ஆண்டனி உடன் இணைந்து சுஷ்மா ராஜ் பசுபதி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். காமெடி கலந்த கதை களத்தில் வெளியாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்த படத்தை என். ஆனந்த் இயக்கியிருந்தார்.விஜய் ஆண்டனி பட இயக்குனருடன் கைகோர்க்கும் சந்தானம்..... ஃபர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

we-r-hiring

இவர் அடுத்ததாக சந்தானம் நடிப்பில் புதிய படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் அன்புச் செழியன் மற்றும் சுஷ்மிதா அன்புச் செழியன் ஆகியோர் இணைந்து தயாரிக்க உள்ளனர். இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (பிப்ரவரி 28) காலை 10.30 மணி அளவில் வெளியாகும் என்ற பட குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை உலகநாயகன் கமல்ஹாசன் வெளியிட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ