சமுத்திரகனி நடிப்பில் உருவாகும் யாவரும் வல்லவரே படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல இயக்குனரான சமுத்திரகனி, தற்போது ஹீரோவாகவும் பல படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமுத்திரக்கனி, திரு. மாணிக்கம், ராமம் ராகவம் உள்ளிட்ட படங்களில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் ரத்னம், இந்தியன் 2, கருடன் போன்ற படங்களில் துணை கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

இதற்கிடையில் சமுத்திரகனி நடிப்பில் யாவரும் வல்லவரே எனும் திரைப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் சமுத்திரகனிவுடன் இணைந்து யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் இணைந்து ரித்விகா, அருந்ததி நாயர், இளவரசு, ரமேஷ் திலக், போஸ் வெங்கட், மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜேந்திர சக்கரவர்த்தி இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு ஜெய்ஸ் ஒளிப்பதிவாளராக பணிபுரிய என் ஆர் ரகுநந்தன் இதற்கு இசை அமைத்துள்ளார். இது நான்கு வெவ்வேறு விதமான கதைகளை இணைத்து கூறும் படமாக தயாராகி உள்ளது. படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே நிறைவடைந்து கடந்த ஆண்டு டிசம்பர் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் ஒரு சில காரணங்களால் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது பட குழுவினர் புதிய ரிலீஸ் செய்தியை அறிவித்துள்ளனர். அதன்படி யாவரும் வல்லவரை திரைப்படம் மார்ச் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.