- Advertisement -
சந்தானம் நடிப்பில் உருவாகி இருக்கும் வடக்குப்பட்டி ராமசாமி படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது
சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராக இருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களையும் வயிலு குலுங்க சிரிக்க வைத்தவர் நடிகர் சந்தானம். ரஜினி, விஜய், அஜித் என தமிழ் திரையுலகின் அனைத்து நடிகர்களுடனுடன் இணைந்து நகைச்சுவை நடிகராக பணியாற்றியவர் நடிகர் சந்தானம். இதைத் தொடர்ந்து, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தின் மூலம் நாயகனாக உருவெடுத்தார். இப்படத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து ஹீரோ வேடத்தில் மட்டும் நடித்து வருகிறார். ஆண்டுக்கு பல திரைப்படங்களில கமிட்டாகி சந்தானம் நடித்து வருகிறார்.
