spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசார்பட்டா பரம்பரை டான்சிங் ரோஸின் புதிய படம் குறித்த அப்டேட்!

சார்பட்டா பரம்பரை டான்சிங் ரோஸின் புதிய படம் குறித்த அப்டேட்!

-

- Advertisement -

கடந்த 2021 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் சார்பட்டா பரம்பரை திரைப்படம் வெளிவந்தது. இப்படத்தை இயக்குனர் பா ரஞ்சித் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் நடிகர் சபீர் கல்லரக்கால், டான்சிங் ரோஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாபாத்திரம் ஆர்யாவை விட அதிகமாக அனைவராலும் பேசப்பட்டது.

we-r-hiring

இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு சபீர் தற்போது ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.

இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக நடிகை மிர்னா நடிக்கிறார். மேலும் இப்படத்தில் தீப்தி, இந்திரஜித், பொற்கொடி, பி ஆர் வரலட்சுமி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இந்தப் படத்தை விக்ரம் ஸ்ரீதரன் எழுதிய இயக்குகிறார். விஜய் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைக்கிறார் என்றும் உதய் தங்கவேலு இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளா பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
டான்சிங் ரோஸான சபீர் இந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் என்பதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.

மேலும் இந்த படம் 90களில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது எனவும் கூறப்படுகிறது.

MUST READ