சர்தார் 2 படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் கார்த்தி கடைசியாக மெய்யழகன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து இவர் வா வாத்தியார், கார்த்தி 29 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். அதேசமயம் இன்னும் சில இயக்குனர்களிடம் கதை கேட்டு வருகிறார் கார்த்தி. இதற்கிடையில் இவர், பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் சர்தார் 2 திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே கடந்த 2019ல் வெளியான சர்தார் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்ற நிலையில் இதன் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருந்து வருகிறது. இந்த படத்தில் கார்த்தியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடித்து வருகின்றனர். பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த பல மாதங்களுக்கு முன்னரே தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் நிறைவடைந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. அந்த வகையில் நேற்று (மே 26) கார்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்திலிருந்து ஸ்பெஷல் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வந்தது. இந்நிலையில் சர்தார் 2 படப்பிடிப்பு தளத்தில் கார்த்தி – ஆஷிகா ரங்கநாத் ஆகிய இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. இந்த புகைப்படத்தை நடிகை ஆஷிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்பட்டது.