spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅவருடைய ரோல் படத்திற்கு கூடுதல் பலம் தந்தது.... 'டூரிஸ்ட் ஃபேமிலி' குறித்து சசிகுமார்!

அவருடைய ரோல் படத்திற்கு கூடுதல் பலம் தந்தது…. ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ குறித்து சசிகுமார்!

-

- Advertisement -

நடிகர் சசிகுமார் டூரிஸ்ட் ஃபேமிலி படம் குறித்து பேசி உள்ளார்.அவருடைய ரோல் படத்திற்கு கூடுதல் பலம் தந்தது.... 'டூரிஸ்ட் ஃபேமிலி' குறித்து சசிகுமார்!

தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான சசிகுமார் தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். அந்த வகையில் இவர் எவிடென்ஸ், ஃப்ரீடம், மை லார்ட் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இது தவிர வதந்தி 2 வெப் தொடரிலும் நடித்து வருகிறார் சசிகுமார். இந்நிலையில் தான் இவரது நடிப்பில் கடந்த மே 1ஆம் தேதி டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியிருந்தார். வித்தியாசமான, எதார்த்தமான திரைக்கதையில் வெளியான இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அவருடைய ரோல் படத்திற்கு கூடுதல் பலம் தந்தது.... 'டூரிஸ்ட் ஃபேமிலி' குறித்து சசிகுமார்!மேலும் இந்த படத்தை பலரும் பாராட்டி வருகின்றனர். அதாவது இந்த படத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பகவதி பெருமாள், மிதுன் ஆகியோர் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தனர். அதிலும் அந்த குட்டி பையன் கமலேஷ் அனைவரையும் தூக்கி சாப்பிட்டு விட்டான். அதுமட்டுமில்லாமல் இப்படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் இந்த படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து இயக்கத்தில் மட்டுமல்லாமல் நடிப்பிலும் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருந்தார். அவருடைய ரோல் படத்திற்கு கூடுதல் பலம் தந்தது.... 'டூரிஸ்ட் ஃபேமிலி' குறித்து சசிகுமார்!இந்நிலையில் சசிகுமார் இந்த படத்தின் வெற்றி குறித்து பேசி உள்ளார். அதன்படி அவர், இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் கதை சொல்லும் போது என்ன செய்தாரோ அதையே தானும் செய்ததால் தான் தன்னுடைய கதாபாத்திரத்திற்கு பாராட்டுகள் கிடைத்ததாக கூறியுள்ளார். மேலும் அபிஷனின் ரோலும் படத்திற்கு இன்னும் உணர்வுப்பூர்வமான பலம் கொடுத்தது என்று தெரிவித்துள்ளார்.

MUST READ