spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசசிகுமார் நடிக்கும் 'மை லார்ட்' படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்!

சசிகுமார் நடிக்கும் ‘மை லார்ட்’ படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்!

-

- Advertisement -

சசிகுமார் நடிக்கும் மை லார்ட் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.சசிகுமார் நடிக்கும் 'மை லார்ட்' படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சசிகுமார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு நந்தன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்தது இவரது நடிப்பில் உருவாகி இருக்கும் பிரீடம், டூரிஸ்ட் ஃபேமிலி போன்ற படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. சசிகுமார் நடிக்கும் 'மை லார்ட்' படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்!அதே சமயம் இவர் ஜோக்கர், குக்கூ, ஜப்பான் ஆகிய படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் மை லார்ட் எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படத்தில் சசிகுமார் உடன் இணைந்து சைத்ரா ஆச்சர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஒலிம்பியா மூவிஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஷான் ரோல்டன் இதற்கு இசையமைக்கிறார். நீரவ் ஷா இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளையும் மேற்கொள்கிறார். சசிகுமார் நடிக்கும் 'மை லார்ட்' படத்தின் டப்பிங் பணிகள் தொடக்கம்!இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளன. அதே சமயம் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அந்த போஸ்டரில் சசிகுமார், சைத்ரா ஆச்சர் ஆகியோர் சிகரெட் பிடிப்பது போன்று காண்பிக்கப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து இந்த படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

MUST READ