சத்யராஜ் மீண்டும் வில்லன் கதாபாத்திரங்களில் களமிறங்கி இருக்கிறார்.
சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி பின்னர் மக்கள் கொண்டாடும் ஹீரோக்களாக மாறியவர்கள் பலர். அதில் முக்கியமானவர் சத்யராஜ். ஆரம்ப காலகட்டத்தில் மிரட்டல் வில்லனாக படங்களில் தோன்றிய அவர் அதையடுத்து கலக்கல் கதாநாயனாக புகழ் பெற்றார்.
தற்போது படங்களில் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் தற்போது ‘அங்காரகன்‘ என்ற படத்தில் சத்யராஜ் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.
இந்தப் படத்தில் அவர் வில்லனாக நடித்துள்ளாராம். மலையாள நடிகை நியா இந்தப் படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் ஸ்ரீபதி கதாநாயனாக நடித்துள்ளார்.
மேலும் படத்தில் அங்காடித்தெரு மகேஷ், ரெய்னா காரத், ரோஷன், அப்புக்குட்டி, தியா, நேகா ரோஸ், கரு சந்திரன் உள்ளிட்டோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். பிரபல டோலிவுட் இயக்குநர் ராம்கோபால் வர்மாவின் உதவி இயக்குநராக பணியாற்றிய மோகன் டச்சு இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின் தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.