காஜல் அகர்வால் நடிப்பில் சத்யபாமா… முதல் பாடல் ரிலீஸ்…
- Advertisement -

முன்னணி நடிகைகளில் ஒருவரான காஜல் அகர்வால் அண்மை காலமாக கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார். அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பாக காஜல் அகர்வால் நடிப்பில் ‘கோஸ்டி’ எனும் திரைப்படம் வெளியானது. ஜெய், மொட்ட ராஜேந்திரன், யோகி பாபு, ஜெகன், உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான காமெடி திரைப்படமான இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

அதன் பின் தற்போது கமல்ஹாசன் நடிப்பில் சங்கர் இயக்கும் ‘இந்தியன் 2’ படத்தில் காஜல் அகர்வால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதைத் தொடர்ந்து இவர் தற்போது தெலுங்கு மொழியில் தனது 60வது படத்தில் நடிக்கிறார். இப்படத்தை சசி கிரண் டிக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் அகில் தேகலா என்பவர் இயக்குகிறார். ஸ்ரீ சரண் பகாலா இதற்கு இசையமைக்கிறார். மேலும் இப்படத்தில் காஜல் அகர்வால் ஒரு மிடுக்கான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
இதைத் தொடர்ந்து காஜல் அகர்வால் நடித்துள்ள திரைப்படம் சத்யபாமா. அறிமுக இயக்குநர் சுமன் சிக்கலா இப்படத்தை இயக்கி இருக்கிறார். காஜல் அகர்வாலுடன் பிரகாஷ் ராஜா மற்றும் நவீன் சந்திரா ஆகியோர் முக்கியகதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படத்தின் முதல் பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இத்திரைப்படம் வரும் மே மாதம் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது