Homeசெய்திகள்சினிமாநலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி... கதாநாயகி ஆகும் சென்சேஷனல் தெலுங்கு நடிகை!

நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி… கதாநாயகி ஆகும் சென்சேஷனல் தெலுங்கு நடிகை!

-

கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் இளம் தெலுங்கு நடிகை கதாநாயகியாக  இணைந்திருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் கார்த்தி தற்போது ராஜூமுருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்‘ படத்தில் நடித்து  வருகிறார். இது கார்த்தியின் 25வது படமாக உருவாகிறது. இதற்கிடையில் மணிரத்னம் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ம் தேதி வெளியாக இருக்கிறது. பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் கார்த்தி வந்தியத்தேவனாக ரசிகர்களின் மனம் கவர்ந்தார்.

இந்நிலையில் கார்த்தி, ஜப்பான் படத்தை அடுத்து இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார். அந்தப் படத்தை ஸ்டுடியோ க்ரீன்  நிறுவனம் தயாரிக்க உள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாதத்தின் துவக்கத்தில் ஆரம்பித்தது.

தற்போது படத்தில் இளம் தெலுங்கு நடிகை இணைந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆம், நடிகை க்ரீத்தி ஷெட்டி இந்தப் படத்தில் கதாநாயகியாக இணைந்துள்ளாராம்.

பாலா இயக்கத்தில் சூர்யா நடித்து வந்த ‘வணங்கான்’ படத்தில் க்ரீத்தி ஷெட்டி கதாநாயகியாக இணைந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், சூர்யா தற்போது படத்தில் இருந்து வெளியேறிவிட்டதால் அவர் இந்தப் படத்தில் தொடர்கிறாரா என்பது குறித்து தகவல் தெரியவில்லை.

MUST READ